இந்திய சினிமா பாடல்களுக்கு பாகிஸ்தானில் தடை!

பாகிஸ்தானின் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அட்டா தரார் இந்த நடவடிக்கையைப் பாராட்டியுள்ளார். 

மே 2, 2025 - 19:59
இந்திய சினிமா பாடல்களுக்கு பாகிஸ்தானில் தடை!

காஷ்மீர் - பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இந்திய சினிமா பாடல்களை பாகிஸ்தான் முழுவதும் உள்ள வானொலி ( எஃப்.எம்) நிலையங்களில் ஒலிபரப்ப தடை விதிப்பதாக பாகிஸ்தான் ஒலிபரப்பாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஷகீல் மசூத் அறிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அட்டா தரார் இந்த நடவடிக்கையைப் பாராட்டியுள்ளார். 

பாகிஸ்தான் ஒலிபரப்பாளர்கள் சங்கத்தின் இந்த முடிவை தேச பக்திக்கான எடுத்துக்காட்டு என்று அவர் விவரித்துள்ளார். 

இது போன்ற சோதனையான காலங்களில் தேசிய ஒற்றுமையை மேம்படுத்துவதிலும் அடிப்படை மதிப்புகளை ஆதரிப்பதிலும் அனைவரும் ஒற்றுமையாக நிற்கிறார்கள் என்பதற்கு இந்தியப் பாடல்கள் தடை செய்யப்பட்டுள்ளது சான்றாகும் என்று அவர் கூறியுள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!