இந்தியாவில் 200 இலங்கை மாணவர்களுக்கு புலமைப்பரிசில்
இங்கு இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்ட படிப்புகளுக்கு இலங்கை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் பட்டப் படிப்புகளை முன்னெடுக்க 200 இலங்கையர்களுக்கு முழு புலமைப்பரிசில்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
பொறியியல், விஞ்ஞானம், வணிகப் பொருளாதாரம், வர்த்தகம், மனுடவியல் மற்றும் கலைப் படிப்புகளுக்கு இந்த புலமைப்பரிசில்கள் வழங்கப்படுவதாகவும், இலங்கையர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் எனவும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இங்கு இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்ட படிப்புகளுக்கு இலங்கை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புலமைப்பரிசில் வெற்றியாளர்கள் பாடநெறியின் காலத்திற்கான படிப்புக் கட்டணம், மாதாந்திர வாழ்க்கைக் கொடுப்பனவு, புத்தகங்கள், எழுதுபொருட்களுக்கான கொடுப்பனவு, விமானக் கட்டணம் மற்றும் கல்விக் கட்டணங்கள் ஆகியவற்றைப் பெற உரிமை பெறுகின்றனர்.
இது தொடர்பான மேலதிக தகவல்களை கல்வி அமைச்சின் www.mohe.gov.lk என்ற இணையத்தளத்திலோ அல்லது கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திலோ பெற்றுக்கொள்ள முடியும்.