நாட்டில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
கைதிகளில் 53 சதவீதமானவர்கள் போதைப்பொருள் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை 290 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துசார உபுல்தெனிய தெரிவித்தார்.
இதனால் நாட்டின் சிறைச்சாலைகளில் கடுமையான இட நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
போதைப்பொருளே காரணம்
2022ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 31ஆம் திகதிய தகவல்களின் பிரகாரம், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளில் 53 சதவீதமானவர்கள் போதைப்பொருள் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் கைதிகளை தடுத்து வைக்கக் கூடிய மொத்த எண்ணிக்கை 11,291ஆகும்.
ஆனால், தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை 26,176ஆக உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.