புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் நாளை(15) இடம்பெறவுள்ளது.

தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் நாளை(15) இடம்பெறவுள்ளது.
இந்த நிலையில், புலமைப்பரிசில் பரீட்சை வினா பத்திரங்களை பரீட்சை நிலையங்களுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளது.
இதனை பரீட்சைகள் திணைகளம் அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
அனர்த்த நிலைக்கு முகங்கொடுத்துள்ள பிரதேசத்தில் உள்ள மாணவர்கள் தமக்கு அருகில் இருக்கும் பரீட்சை நிலையத்துக்கு சென்று பரீட்சை எழுத முடியும் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.