கனடாவில் குடியேற உள்ளோருக்கு சிக்கல்... வெளியான தகவல்!

புலம்பெயர்ந்தோர் கனடாவுக்கு வருவதை அந்நாட்டு அரசியல்வாதிகளும், மக்களில் ஒரு பகுதியினரும் எதிர்ப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஜனவரி 21, 2024 - 00:43
கனடாவில் குடியேற உள்ளோருக்கு சிக்கல்... வெளியான தகவல்!

புலம்பெயர்ந்தோர் கனடாவுக்கு வருவதை அந்நாட்டு அரசியல்வாதிகளும், மக்களில் ஒரு பகுதியினரும் எதிர்ப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

அத்துடன், கனடாவில் ஏற்ப்பட்டுள்ள வீட்டுப் பற்றாக்குறைக்கு புலம்பெயர்ந்தோரே காரணம் என சில அமைச்சர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

புலம்பெயர்வோரை வரவேற்கும் அரசாங்கம் தேவைக்கேற்ப வீடுகளைக் நிர்மாணிக்க வேண்டாமா? என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி உள்ளன.  

சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில் வெறும் 9 சதவீத கனேடியர்கள் மட்டுமே பெரும் எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்தோர் கனடாவுக்கு வருவதை ஆதரிக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.

அத்துடன், 43% பேர் இப்போது இருக்கும் எண்ணிக்கையிலேயே புலம்பெயர்வோர் வருகை இருக்குமானால் தங்களுக்குப் பிரச்சினையில்லை என்றும் 39 வீதமானவர்கள் குறைந்த எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்தோர் கனடாவுக்கு வந்தால் போதும் என்று கூறியுள்ளனர்.

அத்துடன், 72%  கனேடியர்கள் கனடாவின் மக்கள்தொகை அதிகரிப்பதில் புலம்பெயர்ந்தோரின் பங்கு முக்கியமானது என கருதுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

75% கனேடியர்கள் வீடுகள் பற்றாக்குறை பிரச்சினைக்கு புலம்பெயர்ந்தோர் தான் காரணம் என்றும், 73% கனேடியர்கள் கனடாவின் மருத்துவ அமைப்புக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதற்கு புலம்பெயர்ந்தோர் காரணம் என்றும் கருதுகின்றனர்.

அத்துடன், 63% கனேடியர்கள் பள்ளிகளில் கனேடிய மாணவர்களுக்கு இடப்பற்றாக்குறை ஏற்படுவதற்கு புலம்பெயர்ந்தோர் காரணம் என்றும் கருதுவது ஆய்வில் தெரியவந்துள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!