ரம்புக்கனை சம்பவம்: பொலிஸாரை கைது செய்ய உத்தரவு

ரம்புக்கனை சம்பவத்தின் போது, துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொள்வதற்கு உத்தரவிட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியை (எஸ்.எஸ்.பி) கைது செய்யுமாறு, உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 27, 2022 - 18:59
ரம்புக்கனை சம்பவம்: பொலிஸாரை கைது செய்ய உத்தரவு

ரம்புக்கனை சம்பவத்தின் போது, துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொள்வதற்கு உத்தரவிட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியை (எஸ்.எஸ்.பி) கைது செய்யுமாறு, உத்தரவிடப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபருக்கு கேகாலை நீதவான் வசந்த நவரத்ன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அத்துடன், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளையும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கேகாலை நீதிமன்ற மருத்துவ அதிகாரியின் அறிக்கையின் பிரகாரம், ரம்புக்கனை சம்பவத்தில் பலியானவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு இலக்கான நிலையிலேயே மரணித்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதுதொடர்பில் அறிக்கை நீதிமன்றத்தில் இன்று (27) சமர்ப்பிக்கப்பட்டது. அதனையடுத்தே மேற்கண்ட உத்தரவை நீதவான் பிறப்பித்துள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!