கொழும்பில் இனங்காணப்பட்ட கொடிய பக்டீரியா 

காய்ச்சல் காரணமாக ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆகஸ்ட் 30, 2023 - 17:06
கொழும்பில் இனங்காணப்பட்ட கொடிய பக்டீரியா 

காலி சிறைச்சாலையில் பல கைதிகளின் உயிரிழப்புக்கு காரணமாக மெனிங்கோகோகல் பக்டீரியாவால் பாதிக்கப்பட்ட நோயாளி கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜாஎல பிரதேசத்தில் வசிக்கும் 49 வயதுடைய ஒருவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் இரத்மலானை பிரதேசத்தில் உள்ள சுகாதார மற்றும் மருத்துவ நிறுவனமொன்றில் பணியாற்றுவதாகவும் தெரியவந்துள்ளது.

காய்ச்சல் காரணமாக ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இரத்மலானை சுகாதார வைத்திய அதிகாரி ஜே. எம். குணதிலக்க தெரிவித்துள்ளார்.

இந்த நபர் பணிபுரிந்த இடத்தில் உள்ள சுமார் 30 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!