பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை விடுமுறை - அறிவிப்பு வெளியானது
பாடசாலைகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை விடுமுறை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாடசாலைகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை விடுமுறை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, தீபாவளி திருநாள் கொண்டாடப்படுவதால், மத்திய மாகாணத்தில் உள்ள தமிழ்மொழிமூலமான சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில், மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ கமகே, மத்திய மாகாண கல்வியமைச்சின் செயலாளர் மேனக ஹேரத்துக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
அத்துடன், 13ஆம் திகதியன்று வழங்கப்படும் விசேட விடுமுறைக்கு, அந்த வாரத்தில் சனிக்கிழமை பாடசாலையை நடத்துமாறும் ஆளுநர் ஆலோசனை வழங்கியுள்ளார்.