ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்துக்கு பலத்த பாதுகாப்பு
ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்துக்கு முன்பாக இன்று(04) காலை வந்த நபர்கள் அங்கு போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்துக்கு முன்பாக இன்று(04) காலை வந்த நபர்கள் அங்கு போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
இதையடுத்து, கிரிக்கெட் நிறுவனத்துக்கு முன்பாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், பொலிஸாரும் கலகத் தடுப்புப் பிரிவினரும் அங்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் படு தோல்வியுடன், இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு மற்றும் நிறுவன நிர்வாகிகள் உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும் என அரசியல்வாதிகள், சிவில் ஆர்வலர்கள் மற்றும் விளையாட்டு ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
அத்துடன், தற்போதைய இலங்கை கிரிக்கெட் நிர்வாகிகள் மற்றும் தெரிவுக்குழு மீது சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இலங்கை கிரிக்கெட் செயலாளர் இராஜினாமா
இதேவேளை, இலங்கை கிரிக்கெட் செயலாளர் மொஹான் டி சில்வா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
விளையாட்டு துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க அறிக்கையொன்றை வெளியிட்டிருந்த நிலையில் தற்போது இவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.