வெப்பநிலை தொடர்பில் வெளியான எச்சரிக்கை
சிறுவர்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்.

Colombo, March 12 ( News21 ) - நாட்டின் பல பகுதிகளில் மனித உடலினால் உணரக்கூடிய வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையும் என, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல், வடமேல், தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கும் அநுராதபுரம், மன்னார், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் இந்த நிலைமை காணப்படும்.
இந்த நிலையில், சிறுவர்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் அவதானமாக இருக்குமாறு சுகாதார பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.