அவதானமாக இருங்கள் - பல மாகாணங்களுக்கு வெப்பம் தொடர்பில் எச்சரிக்கை
மனித உடலில் உணரப்படும் வெப்பநிலையை அளவிடும் வெப்பச் சுட்டெண், ஈரப்பதம் மற்றும் அதிகபட்ச வெப்பநிலை ஆகிய இரண்டாலும் பாதிக்கப்படுகிறது.

மொனராகலை மாவட்டம் மற்றும் மேல், வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வசிப்பவர்களுக்கு வெப்பமான காலநிலை குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதிகளில் நாளை (9) வெப்பச் சுட்டெண் ‘எச்சரிக்கை நிலைக்கு’ உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மனித உடலில் உணரப்படும் வெப்பநிலையை அளவிடும் வெப்பச் சுட்டெண், ஈரப்பதம் மற்றும் அதிகபட்ச வெப்பநிலை ஆகிய இரண்டாலும் பாதிக்கப்படுகிறது.
சோர்வு உள்ளிட்ட வெப்பம் தொடர்பான பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்காக, அதிக நீரை அருந்துவதுடன், கடுமையான வெளிப்புற செயற்பாடுகளை தவிர்க்குமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.