ஓடும் பேருந்துக்குள் பெண் மீது துப்பாக்கி சூடு
அம்பலாந்தோட்டையில் இன்று பிற்பகல் 2 மணியளவில் பேருந்துக்குள் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.

அம்பலாந்தோட்டையில் இன்று பிற்பகல் 2 மணியளவில் பேருந்துக்குள் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.
பயணித்துக் கொண்டிருந்த பேருந்தில் ஏறிய நிலையில் 2 மர்ம நபர்கள் அதில் பயணித்துக் கொண்டிருந்த பெண் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு ஆயுததாரிகள் பேருந்தை இடைமறித்து, பேருந்தில் ஏறிய பின்னர், அந்தப் பெண் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
அம்பலாந்தோட்டை மடயமலல்ல பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.
காயமடைந்த பெண் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.