வேலைவாய்ப்பை வலியுறுத்தி யாழில் பட்டதாரிகள் போராட்டம் 

அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

ஜுன் 9, 2024 - 17:50
வேலைவாய்ப்பை வலியுறுத்தி யாழில் பட்டதாரிகள் போராட்டம் 

வடக்கு மாகாண வேலையில்லா பட்தாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் வேலையில்லா பட்டதாரிகள் இன்று (9) யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்துக்கு முன்னாள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

'பட்டம் வீட்டில்; பட்டதாரிகள் நடு ரோட்டில்', 'ஒரே ஒரு பரீட்சையில் பறந்து போனது பல பரீட்சை எழுதிப் பெற்ற பட்டம்', என போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர். 

மேலும், தமது கோரிக்கைகளை அரசாங்கம் விரைந்து நிறைவேற்ற வேண்டும் இல்லையேல் தொடர்ந்து தாம் பாரிய போராட்டங்களை நடத்தவுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்தனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!