தங்க நகை வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி! புதிய விலை விவரம்

இன்றைய தினம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 1,900 ரூபாய் குறைந்து 152,600 ரூபாயாக பதிவாகியுள்ளது.

ஆகஸ்ட் 3, 2023 - 17:10
தங்க நகை வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி! புதிய விலை விவரம்

ஆபரண தங்கத்தின் விலையானது இன்று (03) குறைந்துள்ள கொழும்பு - செட்டியார்தெரு தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று (02) தங்கத்தின் விலை குறைந்திருந்த நிலையில் இன்றைய தினம் மேலும் குறைந்துள்ளது.

அதன்படி நேற்றைய தினம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 154,500 ரூபாயா பதிவாகியிருந்ததுடன், 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 167,000 ரூபாயாக காணப்பட்டது. 

இதேவேளை, இன்றைய தினம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 1,900 ரூபாய் குறைந்து 152,600 ரூபாயாக பதிவாகியுள்ளது.

அத்துடன், 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 165,000 ரூபாயாக காணப்படுகிறது. 

தங்கத்தின் விலையானது தொடர்ச்சியாக அதிகரித்து வந்த நிலையில் தற்போதைய விலை குறைவானது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!