கொழும்பில் இன்று பதிவான தங்கத்தின் விலை நிலவரம்
இதனையடுத்து, கடந்த இரு கிழமைக்குள் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 140,000 ரூபாய் என்ற பெறுமதிக்கு திடீரென குறைந்திருந்தது.

Gold Jewelry Price In Sri Lanka Today
நாட்டில் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து 200,000 ரூபாயை எட்டியிருந்தது.
இதனையடுத்து, கடந்த இரு கிழமைக்குள் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 140,000 ரூபாய் என்ற பெறுமதிக்கு திடீரென குறைந்திருந்தது.
எனினும், தங்கத்தின் விலையானது மீண்டும் அதிகரித்து 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 170,000 ரூபாய் என்ற மட்டத்தை அடைந்திருந்தது.
இவ்வாறான சூழலில் இன்று (27) காலை கொழும்பு செட்டித்தெருவில் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 158,300 ரூபாயாக குறைந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை 161,000 ரூபாயாக காணப்பட்ட 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 2,700 ரூபாயால் குறைந்துள்ளது.
இதனிடையே வெள்ளிக்கிழமை 175,000 ரூபாயாக இருந்த 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை இன்றைய தினம் 172000 ரூபாயாக குறைவடைந்துள்ளதாக தெரியவருகிறது.