மூளைச்சாவடைந்து உயிரிழந்த மாணவிக்கு கிடைத்துள்ள பெறுபேறு

அவர் வணிகப் பிரிவில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் மூன்று A சித்திகளை பெற்றுள்ளார்.

செப்டெம்பர் 5, 2023 - 10:24
மூளைச்சாவடைந்து உயிரிழந்த மாணவிக்கு கிடைத்துள்ள பெறுபேறு

தலைவலி காரணமாக மூளைச்சாவு அடைந்த குருநாகல் மலியதேவ மகளிர் கல்லூரியின் மாணவி ஒருவர் உயர்தர பரீட்சை பெறுபேற்றில் மூன்று பாடங்களிலும் அதி சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளார்.

19 வயதுடைய விஹகன ஆரியசிங்க என்ற மாணவிக்கே இந்தப்பெறுபேறு கிடைத்துள்ளது.

அவர் வணிகப் பிரிவில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் மூன்று A சித்திகளை பெற்றுள்ளார்.

மேலும் இந்த மாணவி மூளைச்சாவு அடைந்தபோது இறுதி தருவாயில் மற்றுமொரு உயிரை காப்பாற்றியுள்ளார்.

மாணவி இறந்தபின் அவரிடம் இருந்து எடுக்கப்பட்ட இரண்டு சிறுநீரகங்களும் மிகவும் மோசமான நிலையில் உள்ள இரண்டு நோயாளிகளுக்கு வெற்றிகரமாக மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!