உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் காலம் அறிவிப்பு
அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் மே மாத இறுதியில் வெளியிடப்படும் வாரத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, மே மாதம் 6 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை சாதாரண தரப் பரீட்சை நடைபெறவுள்ளது.
அத்துடன், சாதாரண தரப் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் எதிர்வரும் 30ஆம் திகதி நள்ளிரவு முதல் நிறுத்தப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.