மனோ கணேசன் உள்ளிட்ட நான்கு புதிய எம்.பி.க்கள் பதவிப்பிரமாணம்
புதிய ஜனநாயக முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த உறுப்பினர்கள் நால்வர் இன்று (17) பாராளுமன்ற உறுப்பினர்களாக பதவிப்பிரமாணம் செய்தனர்.

புதிய ஜனநாயக முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த உறுப்பினர்கள் நால்வர் இன்று (17) பாராளுமன்ற உறுப்பினர்களாக பதவிப்பிரமாணம் செய்தனர்.
புதிய ஜனநாயக முன்னணியின் ஒருவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் மூன்று பேரும் பாராளுமன்ற உறுப்பினர்களாக, பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலிஹ் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
புதிய ஜனநாயக முன்னணி சார்ப்பில் பைசர் முஸ்தபா, ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் சுஜீவ சேனசிங்க, மொஹமட் இஸ்மாயில் மற்றும் மனோ கணேசன் ஆகியோர், அந்தந்த கட்சிகளின் தேசிய பட்டியல்களின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றனர்.