பெரு நாட்டின் முன்னாள் அதிபர் புஜிமோரி காலமானார்

பெருவின் முன்னாள் அதிபர் ஆல்பர்டோ புஜிமோரி காலமானதாக அவரது மகள் அறிவித்துள்ளார். 

செப்டெம்பர் 12, 2024 - 15:15
பெரு நாட்டின் முன்னாள் அதிபர் புஜிமோரி காலமானார்

பெருவின் முன்னாள் அதிபர் ஆல்பர்டோ புஜிமோரி காலமானதாக அவரது மகள் அறிவித்துள்ளார். இறக்கும்போது அவருக்கு வயது 86.

அவர் 1990 முதல் 2000 வரை பெருவை ஆட்சி செய்த நிலையில், அந்த நேரத்தில் அவர் மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானார்.

பெரு நாட்டில்  "ஷைனிங் பாத்" என்ற கொரில்லா அமைப்பை ஒடுக்க கடும் இராணுவ பலத்தை அவர் பயன்படுத்தினார்.

இதனையடுத்து, அவர் மீதான குற்றச்சாட்டுகளின் விளைவாக அவர் ஆட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

பின்னர் அவர் ஜப்பானுக்கு தப்பிச் சென்றார், 2005 இல், புஜிமோரி சிலியில் கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவருக்கு எதிராக வழக்கு விசாரணை நடைபெற்று 25 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.

15 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த டிசம்பர் மாதம் சிறையில் இருந்து விடுதலையானமை குறிப்பிடத்தக்கது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!