துருக்கி நோக்கி பயணமான இலங்கை மீட்பு படைகள் 

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்க இடிபாடுகளுக்குள் சிக்குண்டுள்ளவர்களை மீட்பதற்கான உதவிகளை வழங்க இலங்கை தயாராகியுள்ளது.

பெப்ரவரி 7, 2023 - 17:41
துருக்கி நோக்கி பயணமான இலங்கை மீட்பு படைகள் 

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்க இடிபாடுகளுக்குள் சிக்குண்டுள்ளவர்களை மீட்பதற்கான உதவிகளை வழங்க இலங்கை தயாராகியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவிற்கு அமைய, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இந்த விடயத்தை துருக்கி வெளிவிவகார அமைச்சருக்கு அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

அதற்காக இராணுவத்தினர், மருத்துவர்கள் மற்றும் பொறியியலாளர்கள் உட்பட 300 பேர் கொண்ட இராணுவக் குழுவொன்றை களமிறக்க இலங்கை தயாராக இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

துருக்கி – சிரியா எல்லை பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 4,000ற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன் 20,000திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!