நாட்டின் பல பகுதிகளில் மழையற்ற வானிலை - பனிமூட்டமான நிலை
நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று (11) நாட்டின் பல பகுதிகளில் மழையற்ற காலநிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை, பதுளை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.