வரி திருத்தம் காரணமாக நாட்டில் அதிகரிக்கவுள்ள எரிபொருள் விலை!
டீசல் மற்றும் பெற்றோலுக்கும் வற் வரி அறவிடப்படும் எனவும் வற் வரி திருத்தச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும் போது அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனவரி முதல் 97 பொருட்களுக்கு VAT வரியில் அறிவிடப்படலுள்ளதால், நாட்டில் பணவீக்கம் இரண்டு சதவீதத்தால் அதிகரிக்கும் என நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அத்துடன், டீசல் மற்றும் பெற்றோலுக்கும் வற் வரி அறவிடப்படும் எனவும் வற் வரி திருத்தச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும் போது அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், மருந்துகள், ஊனமுற்றவர்களுக்கான உபகரணங்கள், அரிசி மா, கோதுமை மா, காய்கறிகள், பழங்கள், பால் மற்றும் அம்பியுலன்ஸ் சேவைகளுக்கு வற் வரி அறவிடப்பட மாட்டாது என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, வரி திருத்த சட்டமூலம் மீதான விவாதத்தின் பின்னர், அது தொடர்பான வாக்கெடுப்பு நடத்தப்படுவதுடன், புதிய வரைவின்படி, தற்போதைய 15% வற் வரி 18% ஆக அதிகரிக்கும்.
வற் வரி திருத்தத்தில் தொலைபேசி கட்டணங்களை உள்வாங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ள நிலையில், இன்றைய தினம் குறித்த வரி திருத்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற அரசாங்கம் எதிர்பார்த்திருந்த போதிலும், கோரமின்மையால் சபை அமர்வு ஒத்திவைக்கப்பட்டது.