கடும் உணவுப்பஞ்சம்.. அவசரநிலை பிரகடனம் செய்த நைஜீரியா அரசு..!

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியா நாட்டில் அவசரநிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஜுலை 16, 2023 - 13:32
கடும் உணவுப்பஞ்சம்.. அவசரநிலை பிரகடனம் செய்த நைஜீரியா அரசு..!

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியா நாட்டில் அவசரநிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

விவசாயிகள் கொள்ளையர்களால் கடத்தப்படுவதாகவும் அவர்களது விளை பொருள்கள் திருட்டு போவதாகவும் எனவே விவசாயிகளுக்கான பாதுகாப்பை அதிகரிக்க நைஜீரிய அரசு அவசரநிலை பிரகடனம் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
மேலும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதை அடுத்து மக்களை பாதுகாக்க அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும் என நைஜீரியா அதிபர் போலா டின்பு என்பவர் தெரிவித்துள்ளார். 

நைஜீரியாவில் விலைவாசி உயர்வு காரணமாக அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!