அகில இலங்கை ரீதியிலான கரப்பந்தாட்ட போட்டிக்கு தகுதி!

பாடசாலை வரலாற்றில் அகில இலங்கை ரீதியிலான கரப்பந்தாட்ட போட்டிக்கு அக்கரபத்தனை தமிழ் மகா வித்தியாலய அணி தகுதி பெற்றுள்ளமை இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் 2, 2024 - 02:50
ஆகஸ்ட் 2, 2024 - 02:52
அகில இலங்கை ரீதியிலான கரப்பந்தாட்ட போட்டிக்கு தகுதி!

இம்மாதம் நடைபெறவுள்ள அகில இலங்கை ரீதியிலான கரப்பந்தாட்ட போட்டியில் பங்குபற்ற அக்கரபத்தனை தமிழ் மகா வித்தியாலய மாணவிகள் அணி தகுதி பெற்றுள்ளது. 

கடந்த  ஜூலை மாதம் மத்திய மாகாண ரீதியில் நடத்தப்பட்ட 20 வயதுக்குட்பட்ட மகளிருக்கான கரப்பந்தாட்ட போட்டியில், நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட அக்கரபத்தனை தமிழ் மகா வித்தியாலயத்தின் மாணவிகள் சாதித்தனர். 

இந்தப் போட்டியில் அக்கரபத்தனை தமிழ் மகா வித்தியாலய மாணவிகள் இரண்டாம் இடத்தைப்  பெற்றனர்.

இதன்மூலமே, இம்மாதம் நடைபெறவுள்ள அகில இலங்கை ரீதியிலான கரப்பந்தாட்ட போட்டியில் பங்குபற்ற அக்கரபத்தனை தமிழ் மகா வித்தியாலய மாணவிகள் தகுதி பெற்றுள்ளனர். 

பாடசாலை வரலாற்றில் அகில இலங்கை ரீதியிலான கரப்பந்தாட்ட போட்டிக்கு அக்கரபத்தனை தமிழ் மகா வித்தியாலய அணி தகுதி பெற்றுள்ளமை இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!