பிரசார செலவுகளை கண்காணிக்க 'தேர்தல் செலவு மீட்டர்'
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தேர்தல் வேட்பாளர்களின் பிரசார செலவுகளைக் கண்காணிப்பதற்காக “பிரசார நிதி அவதானிப்பு” இதன் பிரதான செயற்பாடாக உள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரசார செலவுகளைக் கண்காணிக்கும் வகையில், “தேர்தல் செலவு மீட்டர்” (சிங்களத்தில் சந்தா சல்லி மீதாரே) எனும் பெயரில் புதிய இணையத்தளம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த இணையத்தளத்தின் அறிமுக விழா, கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நேற்று (16) நடைபெற்றது.
06 முன்னணி தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளான ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL), சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாடு (PAFFREL), சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல்களுக்கான மக்கள் இயக்கம் (CaFFE), தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் (CMEV), ஹேஷ்டேக் தலைமுறை மற்றும் ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கற்கைகளுக்கான நிலையம் (IRES) ஆகியவை ஒன்றிணைந்து இந்த இணையத்தளத்தை ஊருவாக்கியுள்ளன.
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தேர்தல் வேட்பாளர்களின் பிரசார செலவுகளைக் கண்காணிப்பதற்காக “பிரசார நிதி அவதானிப்பு” இதன் பிரதான செயற்பாடாக உள்ளது.
இந்த இணையதளத்தில் ஜனாதிபதி வேட்பாளர்களின் சுயவிவரங்களைக் காண்பிப்பதோடு, அவர்களது தேர்தல் செலவினங்களை வகைகளாகப் பிரித்துக் காண்பிக்கிறது. அதாவது, பிரதான ஊடகங்கள், சமூக ஊடகங்கள், விளம்பரப் பலகைகள் மற்றும் கட்அவுட்கள், பொது நிகழ்வுகள், ஊடகவியலாளர் சந்திப்புகள், வெளியீட்டு விழாக்கள் மற்றும் பிரசார அலுவலகங்களுக்கான செலவினங்கள் என அதில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் செலவு மீட்டர் இணையத்தளம் : https://chandasallimeetare.lk/home