சவப்பெட்டியிலிருந்து சத்தம் - பெட்டியைத் தட்டி உயிருடன் வந்த மூதாட்டி
ஈக்குவடோர் நாட்டில் சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பெண் அவரது துக்க அனுசரிப்பின் போது மீண்டும் எழுந்திருக்கிறார்.

ஈக்குவடோர் நாட்டில் சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பெண் அவரது துக்க அனுசரிப்பின் போது மீண்டும் எழுந்திருக்கிறார்.
76 வயதான பெல்லா மொன்டோயா திறந்திருந்த சவப்பெட்டியிலிருந்து மூச்சுவிடும் காணொளி Twitterஇல் பகிரப்பட்டது.
5 மணி நேரம் நீடித்த துக்க அனுசரிப்பின் போது மொன்டோயா பெட்டியைத் தமது இடது கையால் தட்டியதாக அவரின் மகன் கில்பர்ட் பால்பரன் கூறினார்.
இரு நாள்களுக்கு முன்பு தான் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவமனையில் அறிவிக்கப்பட்டது.
அவருப்பு மரணச் சான்றிதழும் வழங்கப்பட்டது.
தற்போது மொன்டோயா அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருக்கு உயிர்வாயு வழங்கப்படுகிறது என்றும் அவரின் இதயம் நிலையாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.
அவருக்குப் பக்கவாதம் ஏற்பட்ட சந்தேகத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
பின்னர் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
உயிர்க்காப்புச் சிகிச்சை செய்தும் பலனில்லாததால் மருத்துவர் அவர் உயிரிழந்து விட்டதாக அறிவித்தார் என்று அந்நாட்டுச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்த சம்பவத்தை விசாரிக்கக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.