அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றார் டொனால்டு டிரம்ப்

கடுமையான குளிர் காரணமாக வெள்ளை மாளிகையில் உள்ள கேபிட்டால் கட்டிடத்திற்கு உள்ளே ரோடுண்டா என்ற பகுதியில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 

ஜனவரி 21, 2025 - 03:35
ஜனவரி 21, 2025 - 11:35
அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றார் டொனால்டு டிரம்ப்

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 5-ந் தேதி அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் டிரம்ப், பெரும்பான்மைக்கு தேவையான வாக்குகளை விட அதிக வாக்குகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றார். 

நவம்பர் மாதமே தேர்தல் நடந்து முடிந்திருந்தாலும் அமெரிக்க அரசியலமைப்பின்படி ஒவ்வொரு ஜனாதிபதியின் பதவி காலமும் ஜனவரி 20-ந் தேதியில்தான் தொடங்கும். 

அந்த வகையில் இந்திய நேரப்படி இன்று இரவு 10.30 மணிக்கு அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக பதவியேற்றார்.

இதற்காக, கார்கள் புடைசூழ வெள்ளை மாளிகைக்கு வந்தடைந்த டிரம்பை, ஜோ பைடன் கைகுலுக்கி வரவேற்றார்.

கடுமையான குளிர் காரணமாக வெள்ளை மாளிகையில் உள்ள கேபிட்டால் கட்டிடத்திற்கு உள்ளே ரோடுண்டா என்ற பகுதியில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 

டிரம்ப் பதவியேற்பு விழாவானது, இசை நிகழ்ச்சியுடன் வெகு விமரிசையாக நடைபெற்றது. அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ராபர்ட்ஸ் ஜுனியர், டிரம்புக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார். 

இதே விழாவில் துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸும் பதவியேற்றார். கடுமையான வானிலையால், கடந்த 1985-ம் ஆண்டு ரொனால்டு ரீகனும் இதேபோன்று மூடிய அறையில் பதவியேற்று கொண்டார்.

பதவியேற்பு விழாவில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகள், உலக தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர். டிரம்புக்கு ரஷிய அதிபர் புதின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!