விம்பிள்டன் டென்னிஸ் - 2வது சுற்றுக்கு முன்னேறிய ஜோகோவிச், கேஸ்பர் ரூட் 

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்றுப் போட்டியில் செர்பியாவின் ஜோகோவிச் மற்றும் நார்வே வீரர் காஸ்பர் ரூட் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

ஜுலை 4, 2023 - 11:13
விம்பிள்டன் டென்னிஸ் - 2வது சுற்றுக்கு முன்னேறிய ஜோகோவிச், கேஸ்பர் ரூட் 

கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் ஒன்றாகவும், மிக உயரியதாக மதிப்பிடப்படும் இந்த ஆண்டுக்கான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் இன்று தொடங்கியது. 

இப்போட்டி வரும் 16-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்றுப் போட்டியில் தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் செர்பியாவின் ஜோகோவிச், 67-ம் நிலை வீரர் அர்ஜென்டினாவின் பெட்ரோ காசினுடன் மோதினார். 

இதில் ஜோகோவிச் 6-3, 6-3, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதேபோல் மற்றொரு ஆட்டத்தில் நார்வே வீரர் காஸ்பர் ரூட், பிரான்ஸ் வீரர் லாரண்ட் லொகோலியுடன் மோதினார். 

இதில் காஸ்பர் ரூட் 6-1, 5-7, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!