ஹிந்தியில் ரீமேக்காகும் 'பரியேறும் பெருமாள்'
சாதி பிரச்சினையைப் பேசியிருந்த இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றதுடன், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
 
                                கடந்த 2018-ம் ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தில் கதாநாயகனாக கதிரும் கதாநாயகியாக கயல் ஆனந்தியும் நடித்தனர்.
யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, பா.ரஞ்சித் தயாரிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.
சாதி பிரச்சினையைப் பேசியிருந்த இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றதுடன், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்தநிலையில், இப்படம் தற்போது ஹிந்தியில் ரீமேக்காக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இப்படத்திற்கு தடக் 2 என்று பெயரிடப்பட்டுள்ளதுடன், கரண் ஜோகர் தயாரிப்பில் இப்படம் உருவாகிறது.
சித்தார்த் சதுர்வேதி, திரிப்தி டிம்ரி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படம் நவம்பர் 22ஆம் திகதி வெளியாகவுள்ளது.
முதல் பாகமான தடக் படம், சாய்ராத் என்ற படத்தின் இந்தி ரீமேக்காக உருவாகி வெளியானது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 GROUP 1
            GROUP 1
         Listen Live
 Listen Live
         Visit Aha FM
 Visit Aha FM
         
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            