கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்
தமிழகத்தின் நாகபட்டினத்தை சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் - காரைநகர் கடற்பகுதியில் நேற்று(14) மாலை கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் ஆறுபேரை, எதிர்வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதமன்றம் உத்தரவு பிற்பித்துள்ளது.
தமிழகத்தின் நாகபட்டினத்தை சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நீரியல் வளத் திணைக்களத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் ஊர்காவற்துறை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட போது, நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதையும் படிங்க: யாழில் பெருகி வரும் டெங்கு... இதுவரை 2192 டெங்கு நோயாளர் பதிவு
இலங்கை கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தவேளை இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.