டெங்கு தீவிரமாக பரவுகிறது; அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்
இருமல் மற்றும் சளியுடன் காய்ச்சலும் இருந்தால் இரத்த பரிசோதனை செய்து கொள்ளுமாறும் அவர் ஆலோசனை வழங்கினார்.

நாட்டில் டெங்குத் தொற்று தீவிரமாக பரவி வருவதாகவும் அது தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்குமாறும் பொதுமக்களுக்கு அவசர அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கடுமையான காய்ச்சல் மற்றும் மூட்டு வலி ஆகியவை டெங்குவின் பொதுவான அறிகுறிகளாக இருந்தாலும், இருமல் மற்றும் சளி ஆகியனவும் டெங்குவின் அறிகுறியாக இருக்கலாம் என சுவாச நோய் மருத்துவர் ஆஷா சமரநாயக்க தெரிவித்தார்.
இதையும் படிங்க : கடந்த 3 ஆண்டுகளில் இவ்வாண்டு அதிக டெங்கு நோயாளர்கள் பதிவு
எனவே, இருமல் மற்றும் சளியுடன் காய்ச்சலும் இருந்தால் இரத்த பரிசோதனை செய்து கொள்ளுமாறும் அவர் ஆலோசனை வழங்கினார்.
மேலும், இன்னும் சில வைரஸ் நோய்களும் இந்த நாட்களில் பரவலாக உள்ளன. எனவே, பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.