போராட்டத்தின் நடுவே நொறுக்கப்பட்ட பஸ்களுக்கு இழப்பீடு  கோரிக்கை

மே 9ஆம் திகதி எரிக்கப்பட்ட பஸ்களுக்கும் நட்டஈடு வழங்கப்பட வேண்டுமென அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

செப்டெம்பர் 21, 2023 - 19:11
செப்டெம்பர் 21, 2023 - 19:21
போராட்டத்தின் நடுவே நொறுக்கப்பட்ட பஸ்களுக்கு இழப்பீடு  கோரிக்கை

COLOMBO (News21); மே 9ஆம் திகதி எரிக்கப்பட்ட பஸ்களுக்கும் நட்டஈடு வழங்கப்பட வேண்டுமென அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

போராட்டத்தின் போது வீடுகள் சேதமடைந்த அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இழப்பீடு வழங்கினால் தமக்கும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் அந்த சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனைக் கூறியுள்ளார்.

கிட்டத்தட்ட 50 தனியார் பஸ்கள் முற்றிலுமாக நாசமாகியுள்ளதாக கூறிய அவர், மேலும் 50 பேருந்துகள் பகுதியளவில் நாசம் அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இவற்றுக்கு காப்புறுதி மூலம் கிடைத்த தொகை போதாது என்றும், பாதிக்கப்பட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓரளவாவது இழப்பீடு பெற நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், பேருந்து உரிமையாளர்களுக்கு அரசாங்கத்திடம் இருந்து நட்டஈடு கிடைக்கவில்லை என்றும், தலா 10 மில்லியன் ரூபாய் என்றாலும் பாதிக்கப்பட்ட 50 பஸ்களுக்கு நட்டஈடாக வழங்க 500 மில்லியன் ரூபாய் மாத்திரமே அரசாங்கத்துக்கு தேவைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!