வானிலை குறித்து நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
சப்ரகமுவ, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் .

மிக்ஜம் சூறாவளியின் தாக்கம் குறைந்து வருவதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், சப்ரகமுவ, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதேநேரம், மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.
இதேவேளை, மேற்கு-மத்திய வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட மிக்ஜம் சூறாவளி, ஆந்திரா பகுதியில் கரையைக் கடந்த நிலையில் சூறாவளியின் தாக்கம் படிப்படியாக பலவீனமடைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.
எவ்வாறாயினும், இடியுடன் கூடிய மழை, தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தி உள்ளது.