கொள்கலன்களை விடுவித்த சுங்க அதிகாரிகள் நாட்டை விட்டு தப்பிச் செல்லத் திட்டம் - கம்மன்பில 

குறித்த சுங்க அதிகாரிகள் பெல்ஜியம் மற்றும் ஆஸ்திரேலியாவுக்குத் தப்பிச் செல்லத் திட்டமிட்டுள்ளதாக உதய கம்மன்பில கூறியுள்ளார்.

ஜுன் 9, 2025 - 15:13
ஜுன் 9, 2025 - 15:17
கொள்கலன்களை விடுவித்த சுங்க அதிகாரிகள் நாட்டை விட்டு தப்பிச் செல்லத் திட்டம் - கம்மன்பில 

கொழும்பு துறைமுகத்தில் இருந்து 323 கொள்கலன்களை சுங்க சோதனை இல்லாமல் விடுவித்ததற்கு பொறுப்பான அதிகாரிகள் குழு நாட்டை விட்டு வெளியேற தயாராகி வருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

குறித்த அதிகாரிகள் பெல்ஜியம் மற்றும் ஆஸ்திரேலியாவுக்குத் தப்பிச் செல்லத் திட்டமிட்டுள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக பயணத் தடையைப் பெற குற்றப் புலனாய்வுத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று (09) காலை ஆஜராவதற்கு அங்கு வந்திருந்த உதய கம்மன்பில, ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் இதனைக் குறிப்பிட்டார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!