சுங்கத்துறை அதிகாரிகள் இன்றும் நாளையும் சுகயீன விடுமுறை
தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சுங்க அதிகாரிகள் சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.

தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சுங்க அதிகாரிகள் சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.
அதன்டி, இன்று (04) மற்றும் நாளை (05) சுகயீன விடுமுறையை அறிவிக்கும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக சுங்க அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு இறைவரி, இலங்கை சுங்கம் மற்றும் இலங்கை கலால் திணைக்களத்தை ஒன்றிணைக்கும் உத்தேச இலங்கை வருவாய் அதிகாரசபைச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றும் நாளையும் (4ஆம் மற்றும் 5ஆம் திகதி) சுகயீன விடுமுறையை அறிவிக்கும் தொழில் நடவடிக்கையில் ஈடுபட சுங்க அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
உள்நாட்டு இறைவரி, இலங்கை கலால் திணைக்களம் மற்றும் சுங்க தொழிற்சங்கங்கள் இணைந்து இந்த தொழில் நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு முன்னர் தீர்மானித்திருந்த நிலையில், நேற்று (03ஆம் திகதி) உள்நாட்டு இறைவரி மற்றும் கலால் தொழிற்சங்கங்கள் அதிலிருந்து விலகிக் கொண்டன.
இது தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டதாகவும், அதன் பின்னர் சட்டமூலத்தை தயாரிப்பதாக அமைச்சர் எழுத்து மூலம் உறுதியளித்ததன் காரணமாகவே வேலை நிறுத்தம் கைவிடப்பட்டதாக இலங்கை கலால் உத்தியோகத்தர் சங்கத்தின் இணைச் செயலாளர் நிரோஷன் ஜெயக்கொடி தெரிவித்தார்.
அமைச்சருடனான கலந்துரையாடலின் போது மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளின் அடிப்படையில் உள்நாட்டு இறைவரி உத்தியோகத்தர்களின் ஒன்றியமும் தொழிற்சங்க நடவடிக்கையில் இருந்து விலகியுள்ளது.