லொட்டரியில் விழுந்த 50 மில்லியன் டொலர்... இதுவரை பரிசை கேட்காத அதிர்ஷ்டசாலி!
அந்த அதிர்ஷ்டசாலி பரிசை பெற இன்னும் வரவில்லை என்றும் அவர் குறித்த தகவலும் இன்னும் தெரியவில்லை என்றும் கூறப்படுகின்றது.

கனடாவில் கேல்கிரியில் லொட்டோ 6/49 டிக்கெட் வாங்கிய நபர் ஒருவர் பெரும் கோடீஸ்வரர் ஆகியுள்ளார். அவருக்கு 50 மில்லியன் டொலர் பரிசு விழுந்துள்ளது.
ஆனால் அந்த அதிர்ஷ்டசாலி பரிசை பெற இன்னும் வரவில்லை என்றும் அவர் குறித்த தகவலும் இன்னும் தெரியவில்லை என்றும் கூறப்படுகின்றது.
வெற்றியாளர் சார்பில் பரிசு இன்னும் கோரப்படவில்லை. டிக்கெட்டுகளை அவர்கள் சரிபார்க்கும்படி கேட்டுக் கொள்கிறோம். லொட்டரி வெற்றி எண் 25957733-01 ஆகும்” என இது குறித்து லொட்டரி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.