நாட்டின் வறண்ட காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
நாடளாவிய ரீதியில் குறிப்பாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும்.

எதிர்வரும் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையில் தற்காலிக மாற்றம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் குறிப்பாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும்.
எவ்வாறாயினும், இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை பெய்யும்.
அதனைத் தவிர நாட்டின் ஏனைய பகுதிகளில் முக்கியமாக மழை பெய்யாது என்று திணைக்களம் தெரிவிக்கிறது.
மேலும், நாடு முழுவதும் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.