உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் கனடா எத்தனையாவது இடம் தெரியுமா?

2024ஆம் ஆண்டுக்கான மகிழ்ச்சியான G7 நாடுகளில் கனடா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. 

ஏப்ரல் 2, 2024 - 10:57
ஏப்ரல் 2, 2024 - 11:03
உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் கனடா எத்தனையாவது இடம் தெரியுமா?

2024ஆம் ஆண்டுக்கான மகிழ்ச்சியான G7 நாடுகளில் கனடா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. 

இந்த நாடுகளின் ஒட்டுமொத்த மக்களின் மகிழ்ச்சியின் அடிப்படையில், இந்த ஆண்டுக்கான தரவரிசையை World Happiness Report கணக்கிட்டுள்ளது.

இதில் கனடா 2வது இடத்தை பிடித்துள்ளது. இது எல்லா வயதினரும் மகிழ்ச்சியாக உள்ளனர் என்பதன் அடிப்படையில் கணக்கிடப்பட்டதாகும்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளில், பின்லாந்து முதல் இடத்தைப் பிடித்துள்ளதுடன்,  கனடா 15வது இடத்தில் உள்ளது. ஆனால், இதில் ஏனைய அனைத்து G7 நாடுகளையும் விட உயர்ந்த இடத்தில் (2ஆம் இடம்) கனடா இருக்கிறது.

30 வயதிற்குட்பட்டவர்களின் பிரிவில் கனடா 5வது இடத்தில் உள்ளது. இதில் G7 நாடுகளின் அமெரிக்கா, ஜப்பான் பின்தங்கியுள்ளன. 

அதேபோல் 30 முதல் 44 வயது வரை பிரிவில் கனடா G7ல் 4வது இடத்திலும், 45 முதல் 59 வயது வரை பிரிவில் கனடா G7ல் 2வது இடத்திலும் உள்ளது.

60 வயதிற்கு மேற்பட்டவர்கள் பட்டியலில் கனடா G7ல் 2வது இடத்தைப் பிடித்துள்ளது. 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!