கனடாவில் திறக்கப்பட்டுள்ள முதலாவது இலவச மளிகைக்கடை

கனடாவின் Regina நகரில் முதன்முறையாக முற்றிலும் இலவச மளிகைக்கடை ஒன்று திறக்கப்பட உள்ளது. 

ஜுன் 6, 2024 - 17:00
ஜுன் 6, 2024 - 17:04
கனடாவில் திறக்கப்பட்டுள்ள முதலாவது இலவச மளிகைக்கடை

கனடாவின் Regina நகரில் முதன்முறையாக முற்றிலும் இலவச மளிகைக்கடை ஒன்று திறக்கப்பட உள்ளது. 

அங்கு அமைந்துள்ள Regina உணவு வங்கியில், மக்கள் தங்கள் குடும்பத்துக்கு ஒரு வாரத்துக்குத் தேவையான மளிகைப் பொருட்களை இலவசமாக எடுத்துச் செல்லலாம்.

கொவிட் தொற்று உருவானபின், கனடாவில் உணவு வங்கிகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. 

Regina நகரில், எட்டு குடும்பங்களில் ஒன்றும், நான்கு பிள்ளைகளில் ஒருவரும் உணவு வங்கிகளை நாடும் நிலையில் இருக்கிறார்கள்.

இந்த நிலையில், இந்த மளிகைக்கடைக்கு வருவோர், தங்களைக் குறித்த சில அடிப்படை விவரங்களைக் கூறி பதிவு செய்துகொள்ளவேண்டும்.

அதற்குப் பிறகு, நேரத்தை ஒதுக்கி, இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை இந்தக் கடைக்கு வந்து, 200 டொலர் மதிப்புடைய மளிகைப்பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!