தற்காலிக விசாவில் கனடாவில் இருக்கும் தமிழர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!
தற்காலிக குடியிருப்பாளர்கள் நாட்டில் தங்குவதற்கு விண்ணப்பிப்பதால், புதிய திட்டத்திற்கு அமைய அவர்கள், மாகாண குடியேற்ற திட்டங்களுக்கு கூடுதல் தேவையை உருவாக்கும்

தற்காலிக விசாவில் கனடாவில் வசிக்கும் மக்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டின் குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்.
கனடாவில் தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பெரும்பாலானவர்கள் இதில் உள்ளடக்கப்படவுள்ள போதிலும் சிலர் தவிர்க்கப்படுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
வீட்டுச் சந்தை மற்றும் பிற சேவைகள் மீது ஏற்படுத்தியுள்ள அழுத்தத்தை குறைப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என்றும் கனடாவிலுள்ள தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை ஐந்து சதவீதமாக குறைக்க திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தற்காலிக குடியிருப்பாளர்கள் நாட்டில் தங்குவதற்கு விண்ணப்பிப்பதால், புதிய திட்டத்திற்கு அமைய அவர்கள், மாகாண குடியேற்ற திட்டங்களுக்கு கூடுதல் தேவையை உருவாக்கும் என பல அமைச்சர்கள் எச்சரித்துள்ளனர்.
எனினும், தற்காலிகமாக வசிப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக புதிய விசாக்களில் சேர்க்கவேண்டிய வேண்டிய வரம்புகளை அந்நாட்டு அரசாங்கம் இன்னும் தீர்மானிக்கவில்லை என்றும் எதிர்வரும் நாட்களில் தகவல்கள் வெளியிடப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.