புகலிட கோரிக்கையாளர்கள் தொடர்பில் கனடா எடுத்துள்ள முடிவு

புகலிட கோரிக்கை தொடர்பில் புதிய சட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளதாக கனடா அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

மே 3, 2024 - 21:36
புகலிட கோரிக்கையாளர்கள் தொடர்பில் கனடா எடுத்துள்ள முடிவு

புகலிட கோரிக்கை தொடர்பில் புதிய சட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளதாக கனடா அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

குறித்த சட்டத்தின் ஊடாக, புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை துரித கதியில் நாடு கடத்தக்கூடிய முறை குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்மைக்காலமாக வெளிநாட்டு மாணவர்களின் புகலிடக் கோரிக்கை 1500 சதவீதமாக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளன.

அங்கீகரிக்கப்பட்ட காலத்தின் பின்னர் தொடர்ந்தும் கனடாவில் தங்கியிருப்பதற்காக இவ்வாறு மாணவர்கள் புகலிட அந்தஸ்து கோரி விண்ணப்பம் செய்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

“புகலிட கோரிக்கைகளை பரிசீலனை செய்தலை துரிதப்படுத்தவும், நிராகரிக்கப்பட்டவர்களை வேகமாக நாடு கடத்தவும் கூடிய ஏற்பாடுகள் செய்யப்படும்" என குறிப்பிட்டுள்ளது. 

அதேவேளை, அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட கனேடிய வரவு - செலவுத் திட்டத்திலும் இதற்கான ஒதுக்கங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதுடன், குடிவரவு மற்றும் புகலிட பாதுகாப்பு சட்டங்களில் திருத்தம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இந்த மார்ச் மாதம் முதல் இதுவரையில் 46736 பேர் கனடாவில் புகலிட அந்தஸ்து கோரி விண்ணப்பம் செய்துள்ளதாகவும் கடந்த 2023ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த எண்ணிக்கை 62 வீதத்தினால் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!