ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு
கொழும்பு, நுகேகொடை மற்றும் பிலியந்தலை ஆகிய பகுதிகளில் பிரதான வேட்பாளர்களின் இறுதி பிரசாரக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் இன்று (18) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ள நிலையில், கொழும்பு, நுகேகொடை மற்றும் பிலியந்தலை ஆகிய பகுதிகளில் பிரதான வேட்பாளர்களின் இறுதி பிரசாரக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரசாரக் கூட்டம், கிராண்ட்பாஸ் - பலாமரச் சந்தியிலும், ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பிரசாரக் கூட்டம் மருதானை- டவர் மண்டபத்துக்கு முன்பாகவும் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்கவின் கூட்டம் நுகேகொடை நகரிலும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் பிரசாரக் கூட்டம் பிலியந்தலை பகுதியிலும் இன்று பிற்பகல் நடக்கவுள்ளது.