அடுத்த  இரண்டு வாரங்களில் வெள்ள இழப்பீடு தொடர்பில் அமைச்சரவைப் பத்திரம் 

 வெள்ள இழப்பீடு: வெள்ளத்தினால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் அடுத்த இரண்டு வாரங்களில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

செப்டெம்பர் 11, 2023 - 13:28
அடுத்த  இரண்டு வாரங்களில் வெள்ள இழப்பீடு தொடர்பில் அமைச்சரவைப் பத்திரம் 

 வெள்ள இழப்பீடு: வெள்ளத்தினால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் அடுத்த இரண்டு வாரங்களில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக ஹம்பாந்தோட்டை மாவட்டம் உட்பட பல பிரதேசங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த பல வயல் நிலங்கள் அழிவடைந்துள்ளன.

இதன்படி, வறட்சியால் ஏற்பட்ட பயிர் சேதம் தொடர்பான அமைச்சரவை பத்திரத்தில் சேர்ப்பதற்காக, வெள்ளத்தினால் ஏற்பட்ட பயிர் சேதங்களை மதிப்பிடுவதற்கான தகவல்கள் தற்போது சேகரிக்கப்பட்டு வருவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!