சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் விபத்து
காயமடைந்தவர்கள் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ், வஸ்கடுவ பகுதியில் இன்று (29) காலை விபத்துக்குள்ளாகியது.
அளுத்கமவில் இருந்து ஹலவத்தை நோக்கி பயணித்த 8304 இலக்க மின்சார ரயிலுடன் குறித்த பஸ் மோதியுள்ளது.
இந்த விபத்தில் சுற்றுலா பயணிகள் இருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ள அவேளை, ரயில் சாரதியின் கண்ணில் சிறு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் பஸ்ஸின் பின் பகுதி பலத்த சேதமடைந்துள்ளதுடன், ரயிலும் சிறு சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
செக் குடியரசிற்குச் செல்லவிருந்த சுற்றுலாப் பயணிகளை ஒரு ஹோட்டலில் இருந்து ஏற்றிக்கொண்டு, மற்றுமொரு ஹோட்டலில் இருந்த சுற்றுலாப் பயணிகளையும் ஏற்றச் சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.