'எலும்பு இல்லாத கோழி கோழித்துண்டுகளில் எலும்பு இருக்கலாம்' - நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
எலும்பு இல்லாத கோழித்துண்டு உணவைச் சாப்பிட்டு எலும்பை விழுங்கிய நபர் ஒருவர் நோய்வாய்ப்பட்டார்.

எலும்பு இல்லாத கோழித்துண்டுகள் எனக் கூறும்போது அவற்றில் எலும்புகள் இருக்கலாம் என அமெரிக்க நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.
எலும்பு இல்லாத கோழித்துண்டு உணவைச் சாப்பிட்டு எலும்பை விழுங்கிய நபர் ஒருவர் நோய்வாய்ப்பட்டார்.
அப்போது அவர் தொடுத்த வழக்ககில் நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது.
மைக்கல் பெக்ஹெய்மர் 2016ஆம் ஆண்டு Wings on Brookwood உணவகம் மீது வழக்குத் தொடுத்தார்.
எலும்பில்லாத கோழித்துண்டுகளில் எலும்பு இருக்கலாம் என்பதை உணவகம் எச்சரிக்கத் தவறியதாக மைக்கல் வாதிட்டுள்ளார்.
இந்த நிலையில், கோழி எலும்பு அவரது தொண்டையில் சிக்கியதாக அவர் கூறியுள்ளார்.