கொத்மலை நீர்த்தேக்கத்தில் சடலம் மீட்பு
உயிரிழந்தவர் யார் என அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவித்த தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகள் தொடர்வதாகவும் தெரிவித்தனர்.

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் இன்று (15) மதியம் 3 மணியளவில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவத்தனர்.
சடலம் மிதப்பதைக்கண்டு, பிரதேசவாசிகள் தலவாக்கலை பொலிஸருக்கு அறிவித்துள்ளனர். அதன்பின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டது.
மீட்கப்பட்ட ஆண் நீரில் அடித்துவரப்பட்டமையால் உயிரழந்தாரா அல்லது நீர் தேக்கத்தில் பாய்ந்து அவர் உயிரை மாய்தாரா அல்லது எவராவது அவரை கொலை செய்து சடலத்தை நீர்தேக்கத்தில் வீசிச் சென்றார்களா என்பது தொடர்பாக பல கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சுமார் 30 - 40 வயது மதிக்கத்தக்கவரே உயிரிழந்துள்ளார் எனவும் உயிரிழந்தவர் யார் என அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவித்த தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகள் தொடர்வதாகவும் தெரிவித்தனர்.
மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் தலவாக்கலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
(க.கிஷாந்தன்)