கிணற்றில் வீசப்பட்ட நிலையில் சிசுவின் சடலம் யாழில் மீட்பு
கைதடி பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கிணற்றினுள் வீசப்பட்ட நிலையில் சிசுவின் சடலம் யாழ்ப்பாணத்தில் இன்று(21.1.2025) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கைதடி பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை என்றும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.