மீண்டும் தொடங்கும் ஐபிஎல்.? வெளியான தகவல்
போர் பதற்றம் காரணமாக ஒரு வாரத்திற்கு ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்த சூழலில் ஐபிஎல் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்திருந்தது.

இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டதுமன், கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரில், இதுவரை 58 போட்டிகள் நடந்துள்ளன.
கடைசியாக தர்மசாலாவில் நடந்த 58வது போட்டி பாதியிலேயே ரத்து செய்யப்பட்டு வீரர்களும், ஊழியர்களும், பார்வையாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
போர் பதற்றம் காரணமாக ஒரு வாரத்திற்கு ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்த சூழலில் ஐபிஎல் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்திருந்தது.
இந்த நிலையில், இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடக்க உள்ளதுடன், தொடர்ந்து பல சர்வதேச தொடர்கள வரவுள்ளதால் இந்த மாத இறுதிக்குள் ஐபிஎல் தொடரை முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அத்துடன், முக்கிய ஸ்டார் வீரர்கள் ஐபிஎல் போட்டியில் விளையாடும் வாய்ப்பு போய்விடும் என்பதால், ஒரு வாரத்தில் மீண்டும் போட்டிகளை தொடங்கலாம் என்றும், அதற்கு தயாராக இருக்க வேண்டும் என ஐபிஎல் அணிகளுக்கு பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது.
மேலும் ஒரு நாளைக்கு 2 போட்டிகள் என்ற கணக்கில், பெங்களூரு, சென்னை மற்றும் ஐதராபாத் மைதானங்களில் நடத்த வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.