ரணில் - பசில் பேச்சுவார்த்தை சாதகமானது; முதலில் பொதுத் தேர்தல் வருமா?
எந்தவொரு இறுதி முடிவையும் அடைவதற்கு முன்பு இருவரும் அந்தந்த கட்சிகளுடன் கலந்தாலோசிக்க முடிவு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நேற்று நேரில் சந்தித்து கலந்துரையாடிய ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ, இந்த கலந்துரையாடல் சாதகமாக முடிவடைந்ததாக தெரிவித்துள்ளார்.
எனினும், எந்தவொரு இறுதி முடிவையும் அடைவதற்கு முன்பு இருவரும் அந்தந்த கட்சிகளுடன் கலந்தாலோசிக்க முடிவு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
முதலில் பாராளுமன்றத் தேர்தலை நடத்த தீர்மானித்தீர்களா என்று ஊடகவியலாளர்கள் கேட்டதற்கு, பசில் ராஜபக்ஷ நேரடியாக பதில் அளிக்க மறுத்தாலும், முடிவு சாதகமாக இருப்பதாக தெரிவித்தார்.
அத்துடன், ஜனாதிபதியுடன் இணக்கம் காணப்பட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நிறைவேற்று சபை மார்ச் 27ஆம் திகதி கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியும் இந்த விடயத்தை தனது ஐக்கிய தேசியக் கட்சிக்கு தெரிவிப்பார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துமாறு பசில் ராஜபக்ஷ அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.