இளம் பெண்ணின் படுக்கையில் ஓய்வெடுத்த பாம்பு
படுக்கை விரிப்பைத் தூக்கியபோது அதில் சுமார் 2 மீட்டர் நீளங்கொண்ட பழுப்பு நிறப் பாம்பை குறித்த இளம் பெண் கண்டார்.

ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லந்து (Queensland) மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு வீட்டில் அதிர்ச்சி காத்திருந்தது.
படுக்கை விரிப்பைத் தூக்கியபோது அதில் சுமார் 2 மீட்டர் நீளங்கொண்ட பழுப்பு நிறப் பாம்பை குறித்த இளம் பெண் கண்டார்.
அது, உலகின் இரண்டாவது ஆக நச்சுத்தன்மைக் கொண்ட Eastern Brown வகைப் பாம்பு என்பதை அறிந்து அச்சத்தில் உறைந்துவிட்டார்.
பாம்பைப் பிடிப்பவர்களுடன் தொடர்புகொண்டு அவர்கள் கூறியபடி கதவைத் துணியால் மறைத்துப் பாம்பை அறைக்குள் பூட்டி வைத்தார்.
வீட்டில் பாம்பைக் கண்டால் அதனிடமிருந்து தூரமாகச் சென்று, முடிந்தவரை அதை அறைக்குள் பூட்டிவைக்கும்படி ஆலோசனை தந்தார் பாம்பைப் பிடிக்கும் நிறுவனத்தின் உரிமையாளர் ஸெக்கரி ரிசர்ட்ஸ் (Zachary Richards).
ஆஸ்திரேலியாவின் வெப்பமான வானிலையிலிருந்து தப்பிக்க அந்தப் பாம்பு வீட்டுக்குள் வந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அதைப் பிடித்து ஆளில்லாக் காட்டுக்குள் விடுவித்ததாகக் கூறினார் ரிசர்ட்ஸ்.